கொழும்பு, நவ.1- விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் அரசுக்கு எதிராகவும் செய்தி வெளியிடும் இணையதளங்களை முடக்க அந்நாட்டு அரசு முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கான உத்தரவு தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.சமீபத்தில், இலங்கை அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டு வந்த "லங்காநியூஸ்வெப்" இணையதளத்தை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தடை செய்திருந்தது என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக