tamilmaxs.com tamilmaxs: Tamilmaxs log

விஜய் இடத்தை கைப்பற்றுகிறார் சூர்யா !!


பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும், ரசிகர்களை கவர்வதிலும் விஜயக்கு பெரும் போட்டியாக முன்னேறி வரும் சூர்யா, தற்பொழுது விஜய் விட்டுச் சென்ற இடத்தை கைப்பற்றியுள்ளார். ‘3 இடியட்ஸ்’ தமிழ்ப் பதிப்பிலிருந்து விஜய் விலகிவிட்டதாக நாம் செய்தி அளித்திருந்தோம், ஆனால் அப்படத்திலிருந்து விஜய் விலக்கப்பட்டதாக புது தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கரும், ஜெமினி பிலிம் சர்க்யூட்டும் இணைந்து பேசியே விஜயை படத்திலிருந்து விலக்கினார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தின் உண்மைநிலை, மர்மமாகவே உள்ளது. எது எப்படியோ! ஷங்கர் மட்டும் ‘3 இடியட்ஸை’ கைவிடுவதாக இல்லை.

நடிகர் தேர்வின் பல்வேறு குளறுபடிகளுக்கு பிறகு, தற்பொழுது அமீர்கான் வேடத்தில் நடிக்க சூர்யாவிடம் ஷங்கர் பேசி வருகிறாராம். சூர்யா ஏற்கனவே பிற படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள போதும், ஷங்கருடன் இணைய ஆவலாக உள்ளாராம். எனவே சூர்யா விரைவில் ஷங்கருடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவே சரியான தேர்வாக இருப்பார் என்று, ஜெமினி பிலிம் சர்க்யூட்டும் கருதுகிறதாம்.

3 comments:

கருத்துரையிடுக