தீவிர அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ள இயக்குநர் பாக்யராஜ், திமுகவுக்காக பிரசாரம் செய்வேன் என்று கூறி தெளிவாக குழப்பியுள்ளார்.
மதுரைக்கு வந்த பாக்யராஜ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் கதாநாயகனாக நடித்த காலங்களில் அந்த படங்களில் தகவல், சென்டிமெண்ட் காட்சிகள் இருக்கும். அதை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். ஆனால் இப்போது பொழுதுபோக்கைதான் விரும்புகிறார்கள்.
தற்போது தியேட்டருக்கு 30 வயதுகுள்ளவர்கள் தான் வருகிறார்கள். அதற்கு காரணம் அதிநவீன தொழில் நுட்பத்தில் படம் எடுப்பதால் திருப்தி ஏற்படுகிறது. எனவே இளைஞர்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள்.
பெரும்பாலானோர் வீட்டிலேயே சி.டி.களில் படத்தை பார்க்கின்றனர். விரைவில் திருட்டு சி.டி.க்கள் அழியும் காலம் வரும். எல்லோரும் தியேட்டர்களில் வந்து பார்க்கும் சூழ்நிலை உருவாகும்.
என்னுடைய மகன் நடித்துள்ள சித்து பிளஸ்-2 படத்துக்கு ஆதரவு தாருங்கள். இந்த படத்தில் ஆபாசம் இல்லை. நான் முழுநேர அரசியல்வாதியாக மாறும் எண்ணம் தற்போது இல்லை.
வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு அழைப்பார்கள். நான் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார் பாக்யராஜ்.
அரசியலுக்கு வர மாட்டாராம், ஆனால் தீவிரப் பிரசாரம் மட்டும் செய்வாராம். இது என்ன புதிய அரசியல் ஸ்டைலா?
காவலன் பொங்கலுக்கு வராது ? -திடுக்... திகில்...திருப்பம்!
14 ஆண்டுகள் முன்பு
0 comments:
கருத்துரையிடுக