இப்போதைக்கு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்வதாக இல்லை. நீண்ட ஓய்வில் இருக்கிறேன். அதே நேரம் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன், என்று கூறியுள்ளார் நடிகை நயன்தாரா.
பரபரப்பம் கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லாத நாயகி நயன்தாரா. பிரபு தேவா காதல் விவகாரத்தில் பெயர் ஏகத்துக்கும் ரிப்பேர் ஆனாலும், அவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் பெரும் வெற்றி பெற்றதால், தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அனைத்தையும் முழுவதுமாக நிராகரித்துவிடுகிறார் நயன்.
இப்போதைக்கு தெலுங்கில் சீதா வேடத்தில் நடிக்கும் படம் மட்டுமே கைவசம். மலையாளப் படத்தையும் முடித்துவிட்டார்.
அப்படியெனில் சினிமாவிலிருந்து ஓய்வுதானா?
இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு நயன்தாரா அளித்த பேட்டியில், "அது பற்றி உறுதியாக சொல்வதற்கில்லை. சமீபத்தில் கூட என்னை சாவித்ரி என்ற படத்தில் நடிக்கக் கேட்டார்கள். மிக அருமையான கதை, பாத்திரம். ஆனால் வேண்டாம் என மறுத்துவிட்டேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போதைக்கு படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன். நீண்ட ஓய்வுதான் எனக்கு இப்போது முக்கியம். வேறு எதையும் கேட்காதீர்கள்", என்றார்.
காவலன் பொங்கலுக்கு வராது ? -திடுக்... திகில்...திருப்பம்!
14 ஆண்டுகள் முன்பு
0 comments:
கருத்துரையிடுக