எந்திரன் திரைப்படத்தின் கதை திருடப்பட்டதாக கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நான் சிறுவயதில் இருந்து கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதி வருகிறேன். அமுதா தமிழ்நாடன் என்ற புனைப்பெயரில் நான் எழுதி வெளியான கதைகள், கவிதைகளுக்கு பாராட்டுகள், பரிசுகள் பெற்றுள்ளேன்.
அந்த வரிசையில் நான் எழுதிய ஜுகிபா என்ற சிறுகதை இனிய உதயம் என்ற இலக்கிய பத்திரிகையில் கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியானது. லட்சக்கணக்கான மக்கள் அதை படித்துள்ளனர். பின்னர் அதே கதை, 2007-ம் ஆண்டில் சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட எந்திரன் சினிமாவை பார்த்த எனது வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், கடிதம் மூலமாகவும் என்னை தொடர்பு கொண்டு பேசினர். எனது படைப்பான ஜுகிபா என்ற சிறுகதையை அப்படியே எந்திரன் படத்தில் எடுத்து உபயோகித்து இருக்கின்றனர் என்று தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக