
இந்தோனேசியா நாட்டில் உள்ள மெந்தாவி தீவில் கடந்த திங்கட்கிழமை இரவு பூகம்பம் தாக்கியது. இதனால் சுனாமி ஏற்பட்டு ராட்சத அலைகள் அந்த பகுதியை தாக்கின.
இதில் சிக்கி ஏராளமான கிராமங்கள் அழிந்தன. ஏராளமானோர் பலியானார்கள். இதுவரை 311 பேர் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 411 பேரை காணவில்லை.
அவர்களும் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களை ஹெலிகாப்டர் மற்றும் விமானம் மூலம் தேடிவருகிறார்கள்.
சுனாமியால் 13 கிராமங்கள் முற்றிலும் அழிந்து போய்விட்டன. இங்குதான் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. சுனாமி அலை தாக்கியதில் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் மீட்பு குழுவினர் சரியாக மீட்பு பணிகளை செய்ய முடியவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான கூடாரம், மருந்து பொருட்கள், உணவுகளை ஏற்றிக்கொண்டு முதல் சரக்கு விமானம் அந்த தீவை அடைந்துள்ளது. அதில் இருந்து மீட்பு பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பதாங் துறைமுகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் கப்பலும் அனுப்பப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக